கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#JUSTIN : +2 தேர்வு முடிவுகள் வெளியீடு.! அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை.!
+2 தேர்வு முடிவுகள் :
கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இந்த நிலையில் மே 6ஆம் தேதியான இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் காலை 09:30 மணிக்கு வெளியாகி இருக்கிறது.
மதிப்பெண் பட்டியல் பெற :
இந்த முடிவுகளை காண மாணவர்கள் www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in ஆகிய இரு தளங்களிலும் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டால் மாணவர்கள் இன்றிலிருந்து பள்ளியில் பெற்றுக் கொள்ள முடியும்.
அரசு பள்ளிகள் சாதனை :
தமிழக பள்ளிக்கல்வித்துறை பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்ட நிலையில் தற்போது 397 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை உறுதி செய்துள்ளது சாதனையாக கருதப்படுகிறது. சென்ற ஆண்டு 326 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தது.
மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு :
தமிழகம் முழுவதும் 2478 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. அரசு பள்ளிகளை பலரும் இழிவாக நினைக்கும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் இந்த சாதனை மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.