96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பாட்டிக்கு உதவியாக வந்த 15 வயது சிறுமி கர்ப்பம்! 54 வயது நபர் அரங்கேற்றிய கொடூரம்! அம்பலமான அதிர்ச்சி பின்னணி!
சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். 54 வயது நிறைந்த இவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது வீட்டில் பாட்டி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டியின் 15 வயது பேத்தி ஒருவர் அடிக்கடி பால்ராஜ் வீட்டுக்கு சென்று அவரது பாட்டிக்கு உதவி செய்து வந்துள்ளார். மேலும் பிறகு பாட்டியுடனேயே சிறுமி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர்களது சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட பால்ராஜ் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் வெளியே சொல்லக் கூடாது என மிரட்டலும் விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிறுமி, பதறிப்போய் இதுகுறித்து தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவில் வழக்குபதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.