96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
16 வயது மகன் முன் சித்தியின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்து கொன்ற 60 வயது தந்தை... ஓடும் பேருந்தில் பயங்கரம்.!
நிலப்பிரச்சனையில் தம்பியின் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் - திண்டுக்கல் சாலையில், க.பங்களா பகுதியில் தனியார் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தது. அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தமயந்தி (வயது 40) என்ற பெண்மணி பேருந்தில் ஏறி, முன்புற இருக்கையில் அமர்ந்துள்ளார். அதே பேருந்தில் 60 வயதுடைய ராஜாங்கம் என்பவர், தனது 16 வயது மகனுடன் பயணித்துள்ளார்.
பேருந்து தி. வடுக்கப்பட்டி பகுதியில் நின்றபோது, பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர். பின் பேருந்து அங்கிருந்து திண்டுக்கல் நோக்கி புறப்பட தயாராகியுள்ளது. அப்போது, தமயந்தியை நோக்கி சென்ற ராஜாங்கம், அவரை ஆட்டின் கழுத்தை அறுப்பது போல அறுத்துள்ளார்.
இதனால் நிலைகுலைந்துபோன தமயந்தி, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 16 வயது மகனின் கண்முன்னே ராஜாங்கம் நிகழ்த்திய கொடூரம் சிறுவனை பதைபதைக்க வைத்துள்ளது. பின்னர், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தமயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில்,, தமயந்தின் சிறுவனின் சித்தி ஆவார். அதாவது ராஜாங்கத்தின் சகோதரர் கோபி. கோபியின் மனைவி தமயந்தி. இவர்களுக்கு இடையே இருந்த நிலக்கத்தகராறு தொடர்பான விவகாரத்தில் ராஜாங்கம் தமயந்தியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.