குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அரசு பணிக்கு ஆசைப்பட்டு தந்தைக்கு மகன் செய்த கொடூரம்... புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்.!
தந்தையின் அரசு பணிக்கு ஆசைப்பட்டு மகன் தந்தை குடிக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்தது மட்டுமல்லாமல் மார்பில் உதைத்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் துய்மை பணியாளராக 60 வயதுடைய கருப்பையா என்ற நபர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த மாதம் கடைசியுடன் ஓய்வு பெறவிருந்த கருப்பையா திடீரென கடந்த 18 ஆம் தேதி கீரனூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகே சடலமாக கிடந்துள்ளார்.
முதலில் அதிக குடிப்பழக்கத்தால் கருப்பையா இறந்திருக்கலாம் என எண்ணிய நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது கருப்பையா அருந்திய மதுவில் விஷம் கலந்திருந்ததும் மார்பில் கடுமையாக மிதித்ததில் தான் கருப்பையா உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அதனையடுத்து கருப்பையாவின் மகன் பழனியிடம் போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதில் தந்தையின் அரசு பணிக்கு ஆசைப்பட்டு தான் தனது நண்பன் ஆனந்துடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ததாக பழனி ஒப்பு கொண்டுள்ளார். இதையடுத்து கருப்பையாவின் மகன் பழனி மற்றும் அவரது நண்பர் ஆனந்தனை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.