96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தற்கொலைக்கு முயன்ற 9 ஆம் வகுப்பு மாணவி.! நடந்தது இதுதான்!! விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை!!
சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கியுள்ளார். இதனை கண்டு பதறி போன அந்த சிறுமியின் பெற்றோர் அவரை உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சைக்குபிறகு, இயல்பு நிலைக்கு திரும்பிய அவரிடம் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் என்ன நடந்தது? ஏன் அவ்வாறு செய்தார்? என விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது அவர், தனது பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் ஆல்பின் பிரேம்குமார் என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த மாணவி கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கடந்த சில மாதங்களாகவே ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமார் அந்த சிறுமியுடன் நெருங்கி பழகி, ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து அவர் செய்த தொந்தரவால் மன உளைச்சல் அடைந்து மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.