96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கல்லூரி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய 20 வயது இளம்பெண்.. திரைப்பட பாணியில் சென்னையில் பகீர் சம்பவம்.!
வெளியூரில் இருந்து சென்னை வந்து படிக்கும் பெண்களை குறிவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 20 வயது கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் காதலரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு விபசார தொழில் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கும், விபசார தடுப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 இளம்பெண்கள் அடைக்கப்பட்டு விபசார தொழில் நடப்பது உறுதியானது. அவர்களை மீட்ட காவல் துறையினர், விபசாரம் நடத்தி வந்த இளம்பெண் ஜெயப்பிரதா (வயது 20), தரகர் பிரேம் தாஸ் (வயது 30) ஆகியோரை கைது செய்தனர்.
இளம்பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் 20 வயதாகும் பெண் தரகர் ஜெயப்ரதாவிடம் விசாரணை நடந்தது. விசாரணையில், ஜெயப்பிரதா சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி மாணவியான அவர் காதலரோடு சேர்ந்து விபசார தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவர் வெளியூரில் இருந்து சென்னை வந்து தங்கி படிக்கும் மாணவிகளை நோட்டமிட்டு, அவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பணச்செலவு விஷயங்களில் திண்டாடும் மாணவிகளை குறிவைத்து மூளைச்சலவை செய்து விபசாரத்தில் எடுப்பது இருக்கிறார்.
இந்த விசயத்திற்கு கல்லூரி மாணவியும், அவரின் காதலரும் பெரும் புள்ளியாக செயல்பட்டுள்ளார். பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் அவரது காதலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.