குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் விற்பனை... ஈரோட்டை சேர்ந்த 22 வயது இளைஞர் கைது.!
பொதுவெளியில் செல்லும் பெண்களை புகைப்படம் எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவேற்றும் பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அதனை டெலிகிராம் மூலம் விற்பனை செய்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து டெலிகிராம் செயலி மூலம் விற்பனை செய்து வந்தது அம்பலம் ஆகியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை ஆதம்பாக்கத்தைச் சார்ந்த ஒருவர் கடந்த ஜூலை மாதம் சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தார் .
இது தொடர்பாக நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஆர்யா என்ற 22 வயது இளைஞனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் செல்போன் மற்றும் கணினியில் இருந்து ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது .
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த இளைஞர் மட்டும் தனியாக குற்றச்செயலில் ஈடுபட்டாரா அல்லது அவருக்கு பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.