96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மது குடிக்க 10 ரூபாய் தராததால்... நண்பரை கொடூரமாக கொலை செய்த பகிர் சம்பவம்...!!
சென்னையில் உள்ள எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் வசித்து வருபவர் ரஞ்சித். மீனவரான இவர் மனைவி மற்றும் மகன்களை பிரிந்து தனியாக வாசித்து வந்தார்.
நேற்று ரஞ்சித் நெட்டுக்குப்பம் கடற்கரையில் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சக மீனவரான கோவிந்தராஜ் என்பவர் குடிபோதையில் ரஞ்சித்தின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், கோவிந்தராஜும், ரஞ்சித்தும் நேற்று முன்தினம் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது கோவிந்தராஜ் மேலும் மது குடிப்பதற்காக 10 ரூபாய் தருமாறு ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். ஆனால் ரஞ்சித் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கோவிந்தராஜ் ரஞ்சித்தின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.