தாயை காதல் வலையில் வீழ்த்தி, மகள் பலாத்காரம்... விதவை பெண்களை வைத்து காய் நகர்த்தி கொடூரம்.! பரபரப்பு தகவல்.!



a Gang Cheat Separate Living Woman and teasing Sexual Abuse Her Daughters be Awareness

நாகரீகம் நவீனமயாகிறது என்ற பெயரில் ஒவ்வொரு தனிமனிதனின் மனதிலும் வக்கிர எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது. அதனை பெண்கள் அறிந்து சுதாரிப்புடன் செயல்பட்டால் நல்லது.

இன்றுள்ள காலத்தில் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்த்து கரைசேர்ப்பது பெற்றோருக்கு பெரும் சிரமமாகிவிட்டது. பெண் பிள்ளைகளின் மீது பரிவு மற்றும் பாசம் காண்பித்து மதிப்புடன் இருந்த சமூக நிலை என்பது மாறி, சிறுவயது குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெற்றோர் தங்களின் பயத்தினால் பிள்ளைகளை பொத்தி வளர்க்கவும் ஆரம்பித்துவிட்டனர். சிலர் அதனை எதிர்கொள்ள தேவையான கற்பித்தலை வழங்கி வருகின்றனர். ஆனால், பெரும்பாலும் நடக்கும் துயரங்கள் யாவருக்கும் அதிர்ச்சியை தரவல்ல வகையிலேயே இருக்கிறது.

நண்பர், உறவினர், அண்டை வீட்டார், ஆசிரியர், உதவி செய்வதாக நடித்து, காதலிப்பதாக நடித்து என பல விதங்களில் பெண்கள் நயவங்கத்துடன் ஏமாற்றப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். சில இடங்களில் தனது சொந்த மகளையும் சீரழித்த தந்தை, அதற்கு உடந்தையாக இருந்த தாய் எனவும் பல துயரங்கள் நடந்து வருகிறது. ஒரு சமயத்தில் கணவனை இழந்த அல்லது பிரிந்து வாழ்ந்து வந்த பெண்களுக்கு அப்பகுதி மக்கள் உறுதுணையாக இருந்து வந்தார்கள். கணவன் இல்லாத பெண்மணி கஷ்டப்படுகிறான் என தங்களால் இயன்ற உதவியை செய்து வந்தனர். 

tamilnadu

ஆனால், இன்றளவில் அது தலைகீழாக மாறி கணவரை பிரிந்து/இழந்து வாழ்ந்து வரும் பெண்களை குறிவைத்து, அவர்களின் மனதை கெடுத்து காதல் வலையில் விழவைத்து அவர்களின் மகள்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் கொடூரம் நடைபெற்று வருகிறது. இந்த செயலில் கும்பல் திட்டமிட்டு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. முற்றிலும் விதவை பெண்களை குறிவைத்து காயை நகர்த்தும் வாலிபர்கள் பெண்ணை காதல் வலையில் விழவைத்து கணவன் என்ற அந்தஸ்தை பெறுகின்றனர். தனக்கு இனியாவது ஒரு நல்ல கணவன் கிடைத்துவிட்டால், வாழ்வில் முன்னேறலாம் என்று பெண் நினைக்கும் நேரத்தில், உன் தந்தை என மகள்களுக்கு அறிமுகம் செய்துவைத்ததும், அந்த பெண்ணின் குழந்தைக்கு பாலியல் தொல்லை என்பது ஆரம்பிக்கிறது. 

சிறுவயதில் இருந்து தந்தை போல வளர்ந்து வந்த தாயின் இரண்டாவது கணவர், சிறுமிக்கு பருவ வயது வந்ததும் பாலியல் தொல்லை அளிப்பதாக பல பரபரப்பு குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் சிறுமிகள் விஷயத்தை வெளியே கூற இயலாமலும் தவித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் ராயபுரம் பகுதியில் வசித்து வந்த கணவரை இழந்த 3 பெண்களின் தாய் 2 ஆவது காதல் வயப்பட்ட நிலையில், அந்த கயவன் 3 பெண் குழந்தைகளிடமும் அத்துமீறிய கொடூரம் தெரியவந்தது. இதனைப்போன்ற பல துயரங்கள் நடந்தாலும், சில மட்டுமே வெளியில் தெரியவருகிறது. 

tamilnadu

இன்றைய காலத்தில் திருமண வாழ்க்கையில் புதுமண இளம் தம்பதிகள் சிறு விஷயங்களுக்கு கூட மணவாழ்கையினை முறித்து விவாகரத்து கேட்டு வரும் நிலையில், குழந்தை பிறந்தபின்பு குழந்தைகளை மறந்து தாய் - தந்தை எடுக்கும் விபரீத முடிவு மற்றும் அவர்களின் நடவடிக்கை காரணமாக அவர்களது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. நாகரீகம் நவீனமயாகிறது என்ற பெயரில் ஒவ்வொரு தனிமனிதனின் மனதிலும் வக்கிர எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது. அதனை பெண்கள் அறிந்து சுதாரிப்புடன் செயல்பட்டால் நல்லது.