பெரும் சோகம்.. பேருந்தை முந்த முயன்ற போது இரு சக்கர வாகனம் கீழே விழுந்து பிசியோதெரபி மருத்துவர் பலி..!



a-great-tragedy-while-trying-to-overtake-the-bus-the-tw

காஞ்சிபுரம் மாவட்டம் இலுப்பப்பட்டு பகுதியில் உள்ள இந்திரா நகரில் ஜோயஸ் ஜோஸ்வா தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காரைபெட்டையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஜோயஸ் ஜோஸ்வா தனது இரு சக்கர வாகனத்தில் பொன்னேரிக்கரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஜோயஸ் ஜோஸ்வா முந்தி செல்ல முயற்சி செய்துள்ளார். 

accident

அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனமானது பேருந்து சக்கரத்தின் கீழ் விழுந்துள்ளது. இதில் ஜோயஸ் ஜோஸ்வா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனையடுத்து சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் காவல் துறையினர் ஜோயஸ் ஜோஸ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிசியோதெரபி மருத்துவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.