ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அதிக சம்பளத்தில் வேலை.. ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சிக்கிய காம வெறியன்கள்..!
திருப்பூர் அருகே அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒடிசாவை சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த ஆகாஷ் பைரவாவும் ஒடிசாவை சேர்ந்த முகந்தி சேனா என்று இளம் பெண்ணும் வடுகபாளையம் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் அதிக சம்பளத்தில் கட்டிட வேலை வாங்கி தருவதாக அந்த இளம் பெண்ணுக்கு ஆசி வார்த்தை கூறி அவிநாசியில் உள்ள தனது நண்பரான விரேந்தீர் மீனா வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற முகந்தி சேனாவை ஆகாஷும், விரைந்தீர் மீனாவும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து முகந்தி சேனாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்று திருப்பூர் சாலையில் விட்டு சென்றுள்ளனர். மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட முகந்தி சேனா சாலையில் மயங்கி விழவே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முகந்தி சேனாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.