96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அதிர்ச்சி செய்தி.. வகுப்பறையில் ஆசிரியரை ஆ., வார்த்தையால் திட்டி, அடிக்க கை ஓங்கிய மாணவன்.. வீடியோ வைரல்.!
பள்ளி வகுப்பறையில் அமைதியாக அமர்ந்துள்ள ஆசிரியரை மாணவன் நாக்கூசும் வார்த்தையால் திட்டி அவமதித்து அடிக்க பாய்ந்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதன் விளைவால் ஏற்படும் பல்வேறு சமூக சீர்கேடான செயல்களை இன்று கண்ணெதிரே பார்த்து வருகிறோம். ஆசிரியரை மாணவன் அடிக்க பாய்வது, கலாய்ப்பதும், ரௌடியை போல தௌலத்தாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதும் என பல சர்ச்சை காணொளிகள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை தருகிறது.
இந்த நிலையில், ஆசிரியர் ஒருவரை மாணவன் நாகூச வேண்டிய வார்த்தையால் திட்டி, அவரை அடிக்க கைகளை ஓங்கும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், மாணவனின் பெற்றோர்கள் தான் அவனின் செயல்பாடுகளுக்கு வருந்த வேண்டும். படிக்கும் வயதில் ஆசிரியரை அவமதித்து பேசலாமா? என பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வு ஆம்பூரில் உள்ள அரசு பள்ளியில் நிகழ்ந்ததாகவும், ஆசிரியர் ரெக்கார்ட் நோட்டை சமர்ப்பிக்க வேண்டுகோள் வைத்ததற்கு இவ்வாறு பேசியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரியவந்துள்ளது.
பொதுநலன் கருதி, மாணவன் ஆபாச வார்த்தைகளை பேசி திட்டி இருப்பதால், வீடியோ உட்பொதிவு செய்யப்படவில்லை.