96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சிவசங்கர் பாபா அப்படிப்பட்டவர் இல்லை.! அவர் மிகவும் தங்கமானவர்.! விருமாண்டி பட நடிகர் சண்முகராஜா.!
கேளம்பாக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார் சிவசங்கர் பாபா. இவர் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரும் சிவசங்கர் பாபாவின் சீடருமான சண்முகராஜன் பாபாவுக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம்பேசியுள்ளார். அவர் கூறுகையில், ’எனது குரு சிவசங்கர் பாபா. சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவர் தங்கமானவர். நான் 6, 7 ஆண்டுகளாக சித்தர் வழிபாட்டில் இருக்கிறேன். அவர் குறித்து இதுவரையில் ஏழு நூல்கள் தொகுத்துள்ளேன்.
20 நாட்களாக அவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டு வீடியோக்கள் வந்திருக்கிறது. அந்த குற்றச்சாட்டை பக்தர்களாகிய நாங்கள் மறுக்கிறோம். அதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. இது முற்றிலும் பொய் குற்றச்சாட்டு. இந்த பொய் குற்றச்சாட்டுக்கு காரணம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் தான். பத்ம சேஷாத்ரி பள்ளி பற்றி வந்ததை பார்த்து நாமும் ஆரம்பிக்கலாம் என்று பேசியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு பள்ளி நிர்வாகம், சில ஆசிரியர்கள் மீது கோபம். அவர்களை பழிவாங்க பாபா மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி, சாட்சிகளையும் தயார் செய்திருக்கிறார்கள். பாபாவிற்கு பெண்கள் மீது எந்த நாட்டமும் கிடையாது. நிறையப் பெண்களை மரியாதையுடன் நடத்தி படிக்கவைத்துள்ளார். அவருக்கு உலகம் முழுவதும் சீடர்கள் உள்ளனர்.
இந்த பள்ளியில் அனைத்து மதம், சாதியை சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள். பாபா சமுதாய சிந்தனைகள் கொண்டவர். அவருக்கு மதம் கிடையாது, ஜாதி கிடையாது, எதன் மீதும் பற்று கிடையாது. ஒரு மகானை, சித்தரை இரண்டு நாட்களில் அசிங்கப்படுத்த முடியுமா?. அவர் மீது பொய்யாக அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.