ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
#JustIN: பிரபல சர்ச்சை நடிகை மீராமீதுன் மீண்டும் கைது.. அதிரடி நடவடிக்கை.. சோகத்தில் ரசிகர்கள்.!
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ஜாமின் பெற்று வந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீராமீதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் மாடல் நடிகையாக வலம்வந்தவர் மீரா மீதுன். இவர் தனது காதலருடன் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் உரையாற்றியபோது, பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசினார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நடிகை மீராமீதுன், விசாரணைக்கு ஆஜராகாமல் அலைக்கழித்து வந்தார். இதனால் நீதிபதிகள் அவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தனர். இதனை அறிந்த நடிகை தலைமறைவாகவே, அவரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த நடிகை மீராமீதுனை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் விசாரணைக்கு பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.