நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுகத்தான் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு.. ஆடிப்போன திமுக.!
அதிமுக தொண்டர்கள் தன்பக்கம் இருப்பதாக கூறும் சிலருக்கு சிவகாசியில் பொதுக்கூட்டத்தில் மக்கள் பதிலளித்துவிட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் அதிமுக சார்பில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுக தான் திராவிட மாடலையே உருவாக்கியது. தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளம் போட்டது அதிமுக கட்சிதான். திமுகவினர் நமது பணிகளுக்கு ஸ்டிக்கர் ஓட்டுகின்றனர்.
ஒருசிலர் தன்பக்கம் தொண்டர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். இங்கு வந்துள்ள கூட்டத்தினை பார்த்தால் அவர்களுக்கே தெரியும் யாரின் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று. விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் திமுக அரசால் நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.