96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#சற்றுமுன்: எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி.. ஓ.பன்னீர் செல்வதுடன் கைகோர்த்த முன்னாள் எம்.பி..!
அதிமுக முன்னாள் எம்.பி ஓ. பன்னீர் செல்வத்தின் அணியில் இணைந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்பு அதிமுக என்ற இயக்கம் உடைந்து, டிடிவி தினகரன் தலைமையில் புதிய இயக்கம் உருவானது. எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தனித்தனி அணி பிரிந்து சேர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வரானார்.
நடைபெற்று முடிந்த 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு பின்னர் அதிமுக தோல்வியை தழுவியதால், மீண்டும் உட்கட்சிக்குள் பூசல் எழுந்தது. தற்போது அதிமுக உடைந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் கட்சியை உரிமை கொண்டாடி வருகிறது. தற்போதைய நிலையில் கட்சி எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஓ.பன்னீர் செல்வத்தின் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். இவரைப்போல மாற்றுக்கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஓ.பன்னீர் செல்வத்தின் அணியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.