என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ கைது..!!



AIADMK MLA arrested for protesting NLC mine expansion..

என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்ததால், அதிமுக எம்.எல்.ஏ அருன்மொழி தேவன் கைது செய்யப்பட்டார்.

என்.எல்.சி. இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நெய்வேலி அருகேயுள்ள ஆணைவாரி, எரும்பூர், காரிவெட்டி, வளையமாதேவி, கத்தாழை போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது.

நிலம் எடுப்பதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராமத்திற்குள் வர விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் வேலையை  தொடங்கியது. இதில் முதற்கட்டமாக வளையமாதேவி கிராமத்தில் இருக்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களின் எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் வேலைகள் நடைபெற்றது. 

இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தினர். நாளை பந்த் போராட்டமும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் இன்று வளையமாதேவி கிராமத்திற்கு வந்து நிலங்களை கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் பேசினார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.வை கைது செய்தனர். 

அப்போது அவர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் பொதுமக்களை சந்திக்க வந்த எண்ணை ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். போராட்டம் நடத்த வரவில்லை. எதற்காக என்னை கைது செய்கிறீர்கள் என்று கேட்டார். காவல்துறையினர் இதற்கு சரியான பதிலளிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.