அரியலூரில் முதியவர் அடித்துக் கொலை...நகை பணம் காணாமல் போனதால் பரபரப்பு...!



An old man was beaten to death in Ariyalur.

அரியலூரில் முதியவரை தலையில் கட்டையால் அடித்து கொலை செய்து, பணம் மற்றும் நகை திருட்டு. 

அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தசாமி (88).  இவர் அந்த கிராமத்தில் நாட்டாராக இருந்து வந்தார். தன்னுடைய வயலில் ஆர்.எஸ்.பதி போட்டுள்ளார். இன்று காலை தனது தோப்பிற்கு வந்தவர் மாலையில் அவருடைய வயலில் உள்ள மோட்டார் கொட்டகையில் மர்மமான முறையில் இறந்த கிடந்தார். அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்தன.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து தேளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதியவர் கோவிந்தசாமி கையில் அணிந்திருந்த இரண்டு சவரன் மோதிரம் இல்லை எனவும், அவர் எப்போதும் 5 ஆயிரம்‌ வரை கையில் பணம்‌ வைத்திருப்பார் எனவும் அங்கிருந்தவர்கள் கூறினார். 

நகை மற்றும் பணம் காணாமல் போனதால் காவல்துறையினர் சந்தேகமடைந்தனர். மேலும் விசாரணை செய்ததில் இரண்டு பேர் முதியவரை பைக்கில் நடுவில் அமரவைத்து ஏற்றி வந்தது தெரியவந்தது. மேலும் முதியவரை அவர்கள் கொலை செய்து ஏற்றி வந்தார்களா அல்லது இறக்கி விடும்போது அடித்து கொலை செய்தார்களா என்று காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.