96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பெட்ரோல் விலை குறைக்க முயற்சி.! நாங்க ரெடி... திமுக தயாரா.? தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஓப்பன் டாக்.!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாத உரிமை தொகை போன்றவற்றை நிறைவேற்றவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து எதிர்க்கட்சியான அதிமுக நேற்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது. அதிமுகவின் இந்த போராட்டத்தை பா.ஜ.க. வரவேற்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பொய்யான வாக்குறுதி சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவின் உண்மை முகத்தை காட்டுகிறது அதிமுக போராட்டம் என தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதனை நம்பித்தான் தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.
75 நாட்களாகியும் எந்தொரு முக்கியமான வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் விலை, நீட் உள்ளிட்டவற்றை நீக்குவதாக சொல்லிவிட்டு இப்போது தப்பிக்க காரணத்தை கண்டுபிடித்து கொண்டிருக்கின்றனர். பெட்ரோல், டீசல் மீது அதிகமான வாட் வரியை விதிக்கும் தி.மு.க. அரசு, விலை உயர்வுக்கு மத்திய அரசை மட்டும் குறை கூறுகிறது. மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர தமிழக நிதியமைச்சர் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கோரிக்கை வைப்பாரா? என்று கேட்க விரும்புகிறேன். தி.மு.க.,வினர், மீனவர்களுக்கு எதிராக எடுக்கும் செயல்பாடுகளை கண்டித்து, பா.ஜ., மீனவர் அணி சார்பில், நாளை போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.