96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பூவும், பிஞ்சுமாக நின்ற 2 ஏக்கர் முருங்கையை டிராக்டர் கொண்டு அழித்த விவசாயி.! கண்ணீர் கதை.!
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரசோழபுரம் பகுதியில் வசித்து வந்த குமார் எனும் விவசாயி தான் விளைவித்த முருங்கைக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்ற காரணத்தால் 2 ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு இருந்த முருங்கை மரங்களை டிராக்டரை வைத்து அழித்து இருக்கிறார்.
கும்பகோணம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ இரண்டு ரூபாய் அல்லது மூன்று ரூபாய்க்கு மட்டும் தான் விற்கப்படுகிறதாம். இதனால் குமார் கொண்டு சென்று விற்ற முருங்கை காய்களில் இருந்து அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் மீதம் இருக்கும் முருங்கை காய்களை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதில் வேலை செய்யும் நபர்களுக்கு கூலி கொடுக்க கூட தனக்கு பணம் மிஞ்ச வில்லை என்று கூறி காயும், பூவுமாக இருந்த முருங்கை மரங்களை டிராக்டரை விட்டு அழித்து இருக்கிறார் குமார்.
முருங்கை, வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்களை விவசாயம் செய்த விவசாயிகளுக்கு இதுதான் ஆண்டாண்டு காலமாக கிடைக்கும் பலன் என்றும், இதற்கு ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.