அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு! காஞ்சியில் குவியும் மக்கள்!



athivarathar dharidsanam last date


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். 

அந்தவகையில் சயன கோலம் முடிந்து,  நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து  ஆகஸ்டு 16 வரை மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். பின்னர் 17 ம் தேதி ஆக்கிரம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு, 18 ம் தேதி குளத்தில் வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

athi varathar

கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இன்று அத்திவரதரை முக்கிய நபர்களுக்கான வரிசையில் நின்றோ, டோனர் பாஸ் மூலமாகவோ தரிசிக்க முடியாது. பொது தரிசன வரிசையில் நின்று மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறுவதையடுத்து நாளை (சனிக்கிழமை) சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.