96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரதமர் மோடி விழாவில் எல்.முருகன் சொன்ன ஒற்றை வார்த்தை.! அரங்கமே அதிர்ந்து வாயடைத்துப்போன எல்.முருகன்.!
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந் நிகழ்ச்சியில் பல்வேறு திட்ட பணிகளை துவங்கி வைத்தார். தமிழகத்தில் பணிகள் முடிந்த திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்த திட்ட பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.31,400 கோடியாகும்.
நேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் வரவேற்று பேசினார். அப்போது மத்திய இணையமைச்சர் எல் முருகன் தமிழக முதல்வரை, "ஆற்றல் மிகு முதல்வர் M.K.ஸ்டாலின் அவர்களே" என கூறியபோது அரங்கமே அதிர்ந்தது.
விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் திரு முக.ஸ்டாலின் அவர்கள் பெயரை கூறியதும் அரங்கில் கூடியிருந்த மக்கள் அனைவரும் முக.ஸ்டாலின் அவர்களை பெருமை படுத்தும் வகையில் கூச்சல் சத்தம் போட்டனர். இதனால் சிறிது நேரம் தாமதித்து மத்திய இணையமைச்சர் எல் முருகன் பேசினார்.