திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காய்கறி பறிக்க சென்ற பெண்ணிடம், பாஜக நிர்வாகி அத்துமீறல்.! போலீசார் தீவிரம்.!
காய் பறிக்க சென்ற பெண்
நெல்லை ராதாபுரம் தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக இருந்து வருகிறார். ராதாபுரம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் இரு நாட்களுக்கு முன்பாக அந்த ஊரில் உள்ள தோட்டத்தில் வெண்டைக்காய் பறிக்க சென்றுள்ளார்.
பாஜக நிர்வாகி தொல்லை
அப்போது அங்கு வந்த செல்வகுமார் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறி அடித்து அதிர்ச்சியுடன் ஓடி வந்த அந்த அங்கிருந்து தப்பி ஓடி ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: பலகாரம் கொடுக்கச்சென்ற சிறுமியை கடித்துக்குதறிய லேப்ராடர் நாய்; சென்னையில் பகீர்.!
போலீஸ் தீவிரம்
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து மறைமுகமாக உள்ள செல்வ குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். வெண்டைக்காய் பறிக்க தோட்டத்திற்கு சென்ற பெண்ணுக்கு பாஜக நிர்வாகியால் பாலியல் தொல்லை ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்"; சர்ச்சை பேனரால் அதிர்ச்சி.. டிசைனர் உட்பட 3 பேர் கைது.!