திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: பலகாரம் கொடுக்கச்சென்ற சிறுமியை கடித்துக்குதறிய லேப்ராடர் நாய்; சென்னையில் பகீர்.!
சென்னையில் உள்ள ஐயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மனைவி சித்ரா. தம்பதிகளுக்கு யஸ்விகா என்ற மகள் இருக்கிறார். 17 வயதாகும் சிறுமி, அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த 7ம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.
லேப்ராடர் நாய் கடித்தது
விநாயகர் சதுர்த்திக்காக வீட்டில் இனிப்புகள் செய்யப்பட்ட நிலையில், அதனை அக்கம் பக்கத்தினருக்கு கொடுக்க சிறுமி மற்றும் அவரின் தாய் சென்றுள்ளனர். அச்சமயம், பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபர்கள் வளர்க்கும் லேப்ராடர் ரக நாய், திடீரென சிறுமியை பாய்ந்து கடித்தது.
இதையும் படிங்க: 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல்; சென்னையில் பகீர்.!
சிறுமி காயம்
இதனால் சிறுமியின் கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரின் தாய் நல்வாய்ப்பாக மகளை காப்பாற்றினார். நாயும் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. நாய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்த காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஒரே யூரின் நாத்தம்.. தியேட்டரா இது?.. சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் பெண்கள் ஆவேசம்.!