96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மறுமணம் செய்யுமாறு டார்ச்சர் கொடுத்த பா.ஜ.க பிரமுகர்: மன உளைச்சலால் விஷம் குடித்த இளம்பெண்..!
இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கணவனை இழந்த இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டல் விடுத்து வந்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குடை பாறைப்பட்டி பெரியாண்டவர் நகரை சேர்ந்தவர் மனிஷா(25). இவரது கணவர் குமரேசன், சட்டம் பயின்று வந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மனிஷாவின் கணவர் குமரேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக மனீஷா தனது மகளுடன் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்
இந்த நிலையில் சோலை ஹால் பகுதியை சேர்ந்த பா.ஜ.க இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், அடிக்கடி மனிஷா வீட்டிற்கு வந்து உதவிகள் செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் உயிரிழந்த குமரேசன் என்னுடைய சகோதரர் மாதிரி என்று ஆறுதலாக பேசிவந்துள்ளார்.
அதன் பின்னர், கடந்த இரண்டு வருடங்களாக மனிஷாவிடம், தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காத மனிஷா மறுப்பு தெரிவித்து வந்ததால் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் தினேஷ்குமாரின் மிரட்டலும் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்ததால், மன உளைச்சல் அடைந்த மனீஷா விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விஷம் குடித்ததால் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினேஷ்குமார் தன்னை மறுமணம் செய்யுமாறு மனீஷாவை கட்டாயப்படுத்தியதாலும் பொய் புகார் கொடுத்து மிரட்டியதாலும் மனிஷா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அவரது சகோதரி சீமாதேவி குற்றம்சாட்டியுள்ளார்.