"காணும்., காணும் மதுரை எம்.பி-ஐ காணும்".. பாஜகவினர் சர்ச்சை போஸ்டர்.. மதுரையில் பகீர் சம்பவம்.!



BJP Poster about Missing Madurai MP Vengadesan

 

மதுரை தெற்கு தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் சு.வெங்கடேசன். அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. 

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை காணவில்லை என்று மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டிய செயல் நடந்தது. இது தொடர்பான போஸ்டரில் மதுரை எம்பிஐ காணும். கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு குலுக்கி உண்டியல் பரிசு வழங்கப்படும். 

"தேர்தல் நேரத்தில் ஆதாய ஓட்டுக்காக பல பேச்சுக்கள் பேசி, பொய் பிரச்சாரம் செய்து, அறிக்கை வெளியிட்டு, கையெழுத்து இயக்கம் நடத்தி காணாமல் போன சு.வெங்கடேசன் எம்பி-ஐ கண்டுபிடித்து மதுரை அருள்மிகு அன்னை மீனாட்சி முன் நிறுத்துபவர்களுக்கு குலுக்கி உண்டியல் பரிசு வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் மதுரை அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.