சரித்திர பதிவேடு குற்றவாளியுமான, பாஜக நிர்வாகி வீட்டில் பரபரப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!



BJP Supporter Chennai Home Bomb Blast


தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள், திமுகவினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் மதனகோபால். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். 

தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு தற்போது அரசியல்வாதியாக வலம்வரும் அவருக்கு எதிரிகள் அதிகம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், அவரின் வீட்டில் மதனகோபால் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி இருக்கின்றனர். 

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.