ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
17 வயது சிறுமியுடன் வேலை முடிந்ததும் டாடா காட்டிய காதலன்.. போலீஸ் வலைவீச்சு.!
விருதுநகரில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு ஏமாற்றிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இலுங்கிப்பட்டியை சேர்ந்தவரான ராமமூர்த்தி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கோயில் திருவிழாவிற்காக வெளியூரில் இருந்து சிறுமி ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அந்த இளைஞர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை பேசி திருவிழாவிற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். மேலும் தனிமையில் சந்திக்க வேண்டும் என ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதேபோல் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை சிறுமையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின்னர் சிறுமியுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ராமமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளைஞரை தேடி வருகின்றனர்.