மறுத்த காதலி..! அந்தரங்கப் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர்..! கைது செய்த போலீசார்..!
விழுப்புரம் மாவட்டம் கண்டாஞ்சிபுரம் என்னும் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். கடலூரில் உள்ள பிரபல தொலைபேசி விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலைபார்த்துவந்த கலையரசன் அதே கடையில் வேலைபார்க்கும் பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்துவந்துள்ளார்.
இருவரும் காதலிக்கும்போது நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் மகளை கலையரசனுக்கு திருமணம் செய்துவைக்க பெண்ணின் பெற்றோர் மருத்துள்ளனர். இதனால் தனது காதலன் கலையரசனிடம் பேசுவதை அந்த பெண் தவிர்த்துவந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கலையரசன் தனது காதலியுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டுள்ளார். விஷயம் அறிந்த அந்த பெண் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கலையரசனை கைது செய்து, அவரது முகநூல் கணக்கையும் முடக்கியுள்ளனர். காதலனே காதலியின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.