96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திருமணமான சில மணி நேரத்திலேயே மணமகனை தூக்கி எறிந்த மணமகள்! இதுதான் காரணமா?? ஷாக் சம்பவம்!!
திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி தெருவில் வசித்து வந்த 32 வயது நபருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவருடன் திருமணம் செய்ய பெற்றோர்களால் பேசி முடித்து நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மணமகன் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரது தரப்பிலும் கோலாகலமாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிஎன் ரோட்டில் உள்ள கோவில் ஒன்றில் குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் அதே பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இருவருக்கும் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அங்கு இருவருக்கும் உறவினர்கள் சீர்வரிசை செய்துள்ளனர். மேலும் மாப்பிள்ளைக்கு மெட்டி போடப்பட்டுள்ளது. அப்பொழுது மணமகனின் காலை பார்த்த மணப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏனெனில் மாப்பிள்ளையின் இரு கால்களில் ஒன்று மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. இதுகுறித்து அவர் கேட்ட போது விபத்து ஒன்றில் அடிபட்டு தனக்கு ஆபரேஷன் நடைபெற்றதாக கூறியுள்ளார். இதை ஏன் முன்பே கூறவில்லை என கோபப்பட்ட மணப்பெண் திடீரென தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து தனித்தனியாக சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.