குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய பொது ஊரடங்கால் மக்கள் அன்றாட இயல்பு வாழ்க்கையை இழந்து பெருமளவில் தவித்து வந்தனர்.
இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டு நீட்டிக்கபட்டது. அதனைத் தொடர்ந்து உள் மாவட்டங்களில் சில பேருந்துகள் இயங்க தொடங்கியது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும்நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு தற்போது வரும் 31ம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பொதுப் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் அரசு சார்பில் கேட்டுகொள்ளபட்டுள்ளது.