ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அரசு பள்ளியில் கொடுமை... 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! கணித ஆசிரியர் சஸ்பெண்ட்.!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை தேடி வருகின்றனர்.
கணித ஆசிரியர் முத்து குமரன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பாப்பநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் முத்து குமரன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்திருக்கும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
43 மாணவிகள் பாலியல் புகார்
கணித ஆசிரியர் முத்து குமரன் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவிகள் மற்றும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். கணித ஆசிரியர் முத்து குமரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக 43 மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கால் மிதியடியில் அமைச்சர் உதயநிதியின் முகம்; தன்னை இழிவுபடுத்தியோருக்கு சாட்டையடி பதில்...!
சஸ்பெண்ட் மற்றும் வழக்குப்பதிவு
மாணவிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையின் முடிவில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசிரியருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த பாலியல் புகார் தொடர்பாக ஆசிரியர் முத்து குமரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: "ஆடம்பர பிரத்தியேக நாற்காலி" - நா.த.க நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்.! அடுத்த அதிர்ச்சி.!