மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் முன்னாள் அண்ணா பல்கலை., கௌரவ பேராசிரியர்; அதிரவைக்கும் சம்பவம்.!
சென்னையில் உள்ள ராயப்பேட்டை, ஜானிஜஹான் கான் தெருவில் செயல்படும் மார்டன் எஜிகேசன் அறக்கட்டளையை நடத்தி வருபவர் ஹமீது உசேன். இவர் அண்ணா பல்கலை.,யின் முன்னாள் கௌர பேராசிரியர் ஆவார். இதனிடையே, ஹமீது தன்னிடம் பயின்று வரும் மாணவர்களுக்கு பயங்கரவாத சித்தாந்தங்கள் போதனை செய்வது, அவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்திற்கு ஆட்கள் சேர்ப்பது, அதற்கான ரகசிய கூட்டம் நடத்தி வந்ததாக புகார் எழுந்தது.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு
இதனையடுத்து, ரகசிய கண்காணிப்பு நடத்திய அதிகாரிகள், தாம்பரம் மற்றும் ராயப்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்தி பல டிஜிட்டல் ஆவணத்தையும் கைப்பற்றினர். இந்த விஷயம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் துறையினரும் விசாரணையை முன்னெடுத்தனர். ஹமீது உசேன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரஹ்மான் ஆகியோரிடம் நடந்த விசாரணையில் இவர்களுக்கு ஹிஸ்புத் உத் தஹ்ரிர் (எச்யுடி) எனப்படும் சர்வதேச கும்பலோடு தொடர்பு இருப்பது உறுதியானது.
இதையும் படிங்க: 7 மாத டியூசன் காதல்; கைகளை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு உயிரைமாய்த்த 14 வயது சிறுமி, 16 வயது சிறுவன்.!!
உபா சட்டத்தில் கைது
அந்த அமைப்பின் உறுப்பினர்களாகவும் இவர்கள் செயல்பட்டுள்ளனர். யூடியூப் சேனல் நடத்தி இந்திய தேத்தலுக்கு எதிரான சித்தாந்தங்களை பேசி வந்த ஹமீது உசேன் மற்றும் அவரின் குடும்பத்தினர் 3 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்களிடம் மேற்கொண்ட வாக்குமூலத்தின் பேரில் சென்னையில் வசித்து வைத்த முகமது, நவாஸ் செரீப், அகமத் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஹமீது அண்ணா பல்கலை.,யில் கௌரவ பேராசிரியராக வேலை பார்த்து வந்த காரணத்தால், இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்திற்கு உட்படுத்தி இருக்கிறாரா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் பிராய்லர் கோழி விலை கிடுகிடுவென உயர்வு; சோகத்தில் அசைவ பிரியர்கள்.!