#Breaking: சென்னை சென்ட்ரல் - ஹவுரா இரயில் புறப்படும் நேரம் மாற்றம்; தென்னக இரயில்வே அறிவிப்பு.!
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து, மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஹவுரா நகரை இணைக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் - ஹவுரா விரைவு இரயில் தென்னக இரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.
28 மணிநேர தொடர் பயணம்
இந்த இரயில் தினமும் இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு ஹவுரா நோக்கி பயணிக்கும். 28 மணிநேர தொடர் பயணத்திற்கு பின்னர் இரயில் ஹவுரா சென்றடையும்.
இதையும் படிங்க: 55 கிமீ வேகத்தில் வீசும் சூறைக்காற்று; கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு.!
இன்று ஒருநாள் மட்டும்
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 04) இரவு 7 மணியளவில் புறப்படவேண்டிய ஹவுரா இரயிலின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்ட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு பதிலாக, இரயில் 8 மணிக்கு புறப்படும். இணை இரயில் தாமதமாக வருவதால், சென்ட்ரலில் இருந்து புறப்படும் இரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காரின் டயர் வெடித்து சோகம்; அதிமுக பெண் நிர்வாகி உட்பட இரண்டு பேர் பலி.!