கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
வீட்டிற்குள் கும்மாளம்.. கதவை திறந்த அதிகாரிகளுக்கு ஷாக்.. 11 பெண்கள் பரபரப்பு செயல்.!
தனியாக வீடு வாடகைக்கு எடுத்து 11 பெண்கள் சூதாட்டம் நடத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் / குட்கா / கஞ்சா / ஹெராயின் போன்ற போதை பொருட்களை விற்பது அல்லது உபயோகிப்பது, விபச்சார தொழிலில் ஈடுபடுவது அல்லது ஈடுபடுத்துவது, சூதாட்டம், ரம்மி போன்ற சீட்டுக்கட்டுகள் விளையாடுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அவ்வப்போது, இக்குற்றங்களை தடுக்க அதிகாரிகள் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள சேத்துப்பட்டு, எஸ்.எம் நகர் பகுதியில் உள்ள வீட்டில், பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை அதிகாரிகள், இரகசிய தகவலில் குறிப்பிட்ட வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
வீட்டில் நடந்த சோதனையின் போது, 11 பெண்கள் இருப்பது தெரியவந்த நிலையில், இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதை கண்டு காவல் துறையினர் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர், அனைவரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து இதனைப்போல சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் அம்பலமானது.