இன்று சென்னை தினம்., வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் சிறப்பை கொண்டாடுவோம்!!



Chennai Day 2023

தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை:

கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தோற்றுவிக்கப்பட்டது. இதை நினைவுகூறும் வகையில் அமைக்கப்பட்டது சென்னை தினமாகும்.

இது முற்காலத்தில் மதராசு பட்டினம், மெட்ராஸ், சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இது 1996ஆம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

2004ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையின் வரலாற்றுச் சிறப்புகள்:

உலகின் மிக நீண்ட இரண்டாவது கடற்கரையான மெரினா உள்ள நகரம்.

உலகிலேயே லண்டனுக்கு அடுத்து நிறுவப்பட்ட மாநகராட்சி சென்னை.

உலகிலேயே இரண்டாவது பெரிய நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம்.

ஆசியாவின் பெரிய பேருந்து நிலையம், சென்னையில் உள்ள கோயம்பேட்டில் அமைந்துள்ள பேருந்து நிலையம்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்.

இது இந்தியாவிலேயே நான்காவது பெருநகரம்.

தென் இந்தியாவின் நுழைவு வாயில்.

இந்தியாவிலேயே பழமையான நகராட்சி.

இந்தியாவிலேயே மக்களின் பார்வைக்கு உருவாக்கப்பட்ட முதல் விலங்கியல் பூங்கா வண்டலூர் விலங்கியல் பூங்கா.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சாலை வசதி அமைந்துள்ளது.

பல்லவ, சோழ, விஜயநகர, பாண்டியர் போன்ற மன்னர்கள் ஆட்சி செய்த நகரம்.

ஆங்கிலேயர்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட நகரம்.

1959ஆம் ஆண்டு சென்னையில் கட்டப்பட்ட LIC கட்டிடம், அந்த சமயத்தில் இந்தியாவிலேயே உயரமான கட்டிடம்.

 இந்தியாவிலேயே பழமையான ஷாப்பிங் மால் ஸ்பென்சர் பிளாசா.

சென்னையின் சிறந்த சுற்றுலா தலம்:

மாமல்லபுரம் சிற்பக்கூடம்

வள்ளுவர் கோட்டம்

மெரினா கடற்கரை

எலியட்ஸ் கடற்கரை

காந்தி மண்டபம்

கலங்கரை விளக்கம்

சென்னை அருங்காட்சியகம்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களையும் தாண்டி, இன்று சிறப்போடு விளங்கும் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களின் இருப்பிடமான சென்னையை கொண்டாடுவோம்.