96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சென்னையில் அரங்கேறிய வினோத நிகழ்வு! திடீரென வெடித்த வீட்டின் கதவுகள் - குழப்பத்தில் மூழ்கிய குடும்பத்தினர்.
சென்னையில் உள்ள கிண்டி நேருநகர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவர் தனது பேரன் மற்றும் மருமகளுடன் வீட்டை உட்புறமாக சாத்தி விட்டு டிவி பார்த்துள்ளார்.
அப்போது திடீரென வீட்டின் முன்பக்க கதவு, சமையலறை கதவு, மற்றும் படுக்கையறை கதவு வெடித்து சிதறியுள்ளது. உடனே வீட்டில் உள்ள அனைவரும் கத்தியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் பார்த்து அவர்களை மீட்டுள்ளனர்.
உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து வீட்டை சோதனை செய்துள்ளனர். ஆனால் எப்படி வெடித்தது என்பது மர்மமாக இருந்த நிலையில், தடயவியல் துறை துணை இயக்குனர் ஷோபியா ஜோசப் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
அதில் ஜலதோஷத்திற்கு ஆவி பிடிப்பதற்காக சமையல் எரிவாயு அடுப்பில், வெந்நீர் வைத்து உள்ளனர். நீண்ட நேரம் தண்ணீர் கொதித்ததால், தண்ணீர் பொங்கி பாத்திரத்தில் இருந்து வெளியே விழுந்ததில் அடுப்பு அணைந்துவிட்டது. ஆனால் கியாஸ் வருவது நிற்கவில்லை.
அடுப்பில் இருந்து கியாஸ் வெளியேறி சமையல் அறை முழுவதும் பரவியது. வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை, வாசல் கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகள் அனைத்தும் காற்று வெளியேற முடியாத அளவுக்கு பூட்டி இருந்ததால் கியாஸ் வெளியேற முடியாமல், கொதிக்கும் வெந்நீரால் ஏற்பட்ட நீராவியுடன் கலந்து உருவான அழுத்தம் காரணமாக இந்த கதவுகள் வெடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இது மக்களுக்கு ஒரு எச்சரிக்கையான சம்பவமாக கருதப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது