சென்னையில் நடந்த துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய பெண் இவர்தான்.. புகைப்படம் வெளியானது..
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் தொடர்புடைய பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட பைனான்சியர் தலில்சந்த் என்பவர் தனது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல், மகள் பிங்கி ஆகியோருடன் சென்னை செளகார்பேட்டையில் வசித்துவந்தநிலையில் தலில்சந்த், புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகிய மூவரும் வீட்டில் மர்மநபர்களால் சுட்டு கொலைசெய்யப்பட்டு மூவரும் சடலமாக கிடந்தனர்.
வெளியே சென்று வீடு திரும்பிய தலில்சந்த் மகள் பிங்கி தனது குடும்பத்தினர் சுட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை கன்டு அலறி துடித்தார். மேலும் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்துவந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது, தலில்சந்த் மகன் ஷீத்தல்கும் புனேவை சேர்ந்த ஜெயமாலா எனபவருக்கும் திருமணம் முடிந்து 13 மற்றும் 11 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றநிலையில் பிள்ளைகளுடன் ஜெயமாலா புனேவில் வசித்துவருகிறார்.
இந்நிலையில் தனக்கு கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் வேண்டி ஜெயமாலா வழக்கு தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ராஜஸ்தான் மற்றும் சென்னையில் இருக்கும் சொத்துக்களை பிரித்து எழுதி வைக்குமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார்.
ஆனால் ஷீத்தல் மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்துவந்துள்ளனர். இந்நிலையில் ஜெயமாலாவின் சகோதரர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்து ஷீத்தல் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் ஷீத்தல் குடும்பத்தினர் சொத்துக்களை பிரித்துத்தர மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புனேவில் இருந்து சகோதரர்கள் 2 பேர், சித்தப்பா, மாமா என 5 பேருடன் சென்னை வந்த ஜெயமாலா, தனது கணவரின் வீட்டுக்கு சென்று கடைசியாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தமுறையும் அவர்கள் மறுப்பு தெரிவித்ததை ஜெயமாலாவின் குடும்பத்தினர் தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கியை வைத்து தலில்சந்த், அவரது மனைவி மற்றும் மகன் மூவரைம் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்தபோது கொலைசெய்யப்பட்ட வீட்டில் இருந்து ஒரு பெண் மற்றும் சிலர் வெளியேறும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை தலில்சந்த் மகள் பிங்கியிடம் காண்பித்தபோது அந்த பெண் ஜெயமாலாதான் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இதனை அடுத்து கொலையாளிகளை பிடிக்க சென்னை போலீசார் புனே சென்றநிலையில், ஜெயமாலா அவரது சகோதரர் கைலாஷ் உள்பட 3 பேரை புனேவில் தனிப்படை போலீசாரால் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...