தண்டனைக்கைதி தாம்பத்திய வாழ்க்கைக்கு பரோல் இல்லை.. சென்னை உயர்நீதிமன்றம் தடாலடி.!
குற்றவாளிக்கு ஏற்கன்வே குழந்தைகள் உள்ள நிலையில், கருத்தரிப்பு சிகிச்சைக்காக அவரை பரோலில் வெளியே வர அனுமதிக்க இயலாது. குற்றவாளிக்கு தாம்பத்திய உரிமை பெயரில் பரோல் கொடுத்தால், அவருக்கும் - பொதுமக்களுக்கும் வித்தியாசம் இன்றி போய்விடும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிக்கு வழக்கில் சிறையில் இருக்கும் கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என அவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே கருத்தரிப்பு செய்வதற்கு 2 வாரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக தற்போது அவரின் மனைவி அதே காரணத்தை கூறி மனுதாக்கல் செய்துள்ளார். அவரின் தாம்பத்திய உரிமைக்கு பரோல் வழங்க சிறை வீதியில் அனுமதி இல்லை. இதனால் விரிவான தீர்ப்பை வழங்க, வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக தெரிவித்தது.
கடந்த 2019 ஆம் வருடம் முதல் விசாரணை செய்யப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பு, இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதிகள் சத்திய நாராயணா, ஆதிகேசவலு அமர்வில் வாசிக்கப்பட்டது. தீர்ப்பில், "தண்டனைக்கைதி சாதாரண பொதுமக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை அனுபவிக்க அனுமதி கொடுக்க முடியாது.
அவ்வாறு தண்டனைக்கைதிக்கு சுதந்திரம் கொடுத்தால், சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்து வரும் குடிமக்களுக்கும், சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தண்டனை குற்றவாளிக்கு வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதனால் கைதிக்கு தாம்பத்திய உரிமை பெயரில் பரோல் வழங்க இயலாது. அசாதாரண காரணத்திற்கு மட்டுமே பரோல் வழங்க விதிகள் உள்ளன.
குழந்தைகள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெறுவதற்கு பரோல் வழங்க இயலும். ஆனால், ஏற்கனவே குழந்தை உள்ள கைதிக்கு, மேற்கூறிய காரணத்தை கொண்டு பரோல் வழங்க இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.