96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆம்னி பேருந்தை சுத்தம் செய்கையில் சோகம்.. மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு.!
ஆம்னி பேருந்து கழுவும் போது, மின்சாரம் தாக்கி ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (வயது 22). இவர் ஆம்னி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று வானகரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் ஆம்னி பேருந்தை நிறுத்தி, மின்மோட்டார் மூலம் சுத்தம் செய்ய முற்பட்டுள்ளார்.
அப்போது மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி சுத்தம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின் இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.