குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
சொத்து பிரச்சனையில், சரித்திர பதிவேடு குற்றவாளியின் சல்லித்தனம்.. அதிரடி காண்பித்த காவல்துறை.!
சென்னையில் உள்ள பல்லாவரம், திரிசூலம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 29). இவரின் சகோதரர் சத்யா (வயது 20). இவரின் மீது வழிப்படி, அடிதடி, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சரித்திர பதிவேடு குற்றவாளியான சத்யா, அவரின் அண்ணன் முருகேசனை சொத்து பிரச்சனையில் கொலை செய்ய முயற்சித்து கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் அவரின் இடது உள்ளங்கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட முருகேசன், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் காவல் துறையினர், சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.