96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கல்லூரி மாணவி சத்யஸ்ரீ கொலை விவகாரம்; குற்றவாளி சதீஷ் மீது குண்டர் பாய்ச்சல்..!
இரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சத்ய ஸ்ரீ (வயது 20), கடந்த அக்.13ம் தேதி பரங்கிமலை இரயில் நிலையத்தில் சதீஷ் என்பவனால் இரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மாணவிக்கு காதல் தொல்லை அளித்து வந்த சதீஷ் தனது காதலை ஏற்றுக்கொள்ளாத ஆத்திரத்தில் மாணவியை கொலை செய்தது அம்பலமானது.
இதனையடுத்து, சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவனின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர ஆணையர் உத்தரைவிட்டதன் பேரில் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.