#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ச்சீ.. 14 வயது சிறுமிடம் பேசுற பேச்சா இதெல்லாம்?.. போக்ஸோவில் கைதான போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர்.!
சிறுமியிடம் வீடியோ காலில் பேசி பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி தனது தந்தை நடத்தி வரும் தள்ளுவண்டி கடைக்கு உதவிக்காக சென்று வருகையில், அருகே போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் கார்த்திகேயன் (வயது 39) என்பவர் சிறுமியுடன் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த பழக்கத்தின் மூலமாக சிறுமியின் அலைபேசி நம்பரை பெற்றுக்கொண்ட கார்த்திகேயன், அவ்வப்போது சிறுமிக்கு வீடியோ காலில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் W18 எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.