#Breaking: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; 24 மணிநேரத்தில் வலுப்பெற வாய்ப்பு.!
வங்கக்கடல் பகுதியில் வரும் 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வரும் 24 மணிநேரத்தில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சாத்தியக்கூறுகள் தென்பட்டுள்ளன. வடக்கு அந்தமான் கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக, வரும் நாட்களில் உருவாகும் என கணிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: #Breaking: இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நாளை உருவாகிறது
அக்.21 ம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் நிலவிய வானிலை மாற்றம் காரணமாக, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்.20ம் தேதியான இன்று முதல் 24 மணிநேரத்திற்குள் உருவாகும் என தெரியவந்துள்ளது.
அக்.23 ல் வலுப்பெறும்
நாளை காலை 08:30 மணிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 23 ம் தேதி வாக்கில் வலுப்பெற்று, வடக்கு திசையில் நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இவை தற்போதைய நிலையில் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பில்லை.
எனினும் வரும் நாட்களில் அதன் திசை மாறினால், அதற்கான அறிவிப்புகள் தெரிவிக்கப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்கள் மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.
இதையும் படிங்க: ஹிந்தி படிக்கணுமா வேண்டாமா? - விஜய பிரபாகரன் நறுக் பதில்.!