தாம்பத்தியம் வேண்டாம்., கணவரை ஏமாற்ற மனமில்லை: 35 வயதில் திருமணமான 13 நாட்களில் புதுமணப்பெண் விபரீதம்.!
தனது கணவரை தாம்பத்திய விஷயத்தில் தட்டிக்கழித்த மனைவி, ஒருகட்டத்தில் மனதுடைந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, தமிழர் நகரில் வசித்து வருபவர் பிரகாஷ். இவரின் மனைவி கௌரி. தம்பதியின் மகள் ரேகா (வயது 35), அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், ராஜசேகர் (வயது 40) என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சியிக்கப்பட்டு, கடந்த நவ. 14ம் தேதி வடபழனி முருகன் கோவிலில் வைத்து திருமணமும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட ரேகா தண்டையார்பேட்டையில் உள்ள தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்தவாறு தினமும் வேலைக்கும் சென்று வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த திங்கள்கிழமை மாமியாருக்கு போன் செய்த ராஜசேகர், தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்ல வருவதாக கூறியுள்ளார். மாப்பிள்ளையின் வருகையை அறிந்த மாமியார், தகவலை மகளிடம் தெரிவித்துவிட்டு விருந்து வைக்க இறைச்சி வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த ரேகா சற்றும் எதிர்பாராத சூழலில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆர்.கே நகர் காவல் துறையினர், ரேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருமணமான 13 நாட்களுக்குள்ளாக தற்கொலை நடந்ததால் ராஜசேகரிடம் விசாரணை நடந்தது. அப்போது, உடற்பருமனால் ரேகா பாதிக்கப்பட்டு இருந்ததால், தனக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளது என தாம்பத்தியத்தை தள்ளிப்போட்டு இருக்கிறார் மனைவியின் உடல்நலம் சரியானதும் அவருடன் கூடிக்கொள்ளலாம் என ராஜசேகரும் பொறுமை காத்துள்ளார்.
மகன் மனைவியுடன் நலமாக இருக்கிறானா? என தந்தை விசாரித்தபோது, அவரிடமும் நடனத்தை ராஜசேகர் தெரிவித்து இருக்கிறார். மருமகளின் உடல்நலமே முக்கியம் என்று அறிவுரை கூறிய ராஜசேகரின் தந்தை, பொறுமை காக்க அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த விபரம் எதுவும் தெரியாத ரேகாவின் தாயார், தனது மகள் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் என எண்ணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். தாயின் நிலையை புரிந்த மகளோ, கணவரையும் தனது குடும்பத்தாரையும் அதற்கு மேல் ஏமாற்ற முடியாது என எண்ணி விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என ராஜசேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.