திடீரென பஞ்சரான டூவீலர்; கீழே விழுந்து 17 வயது பள்ளி மாணவன் பரிதாப பலி.!
இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலைகளில் கவனமாக சென்றாலும், சில நேரம் இயந்திர கோளாறுகள் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்வாறான விபத்துகள் நொடியில் வாகனத்தில் பயணம் செய்யும் நபர்களின் உயிரை பறிக்கிறது.
டயர் பஞ்சராகி சோகம்
சென்னையில் உள்ள வண்டலூர் வெளிவட்ட சாலையில், வரதராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 12ம் வகுப்பு மாணவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளனர். அப்போது, மாணவர்கள் வாகனத்தில் சென்றபோது, திடீரென டயர் பஞ்சர் ஆகியுள்ளது.
இதையும் படிங்க: 6 பேர்க்கு கொரோனா பாசிடிவ்.! சென்னை, கோவை மக்கள் அதிர்ச்சி.? சுகாதார துறை வேண்டுகோள்.!?
சிறுவனின் தந்தைக்கு எதிராக வழக்குப்பதிவு
இதனால் வாகனத்தில் சென்ற மாணவர்கள் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், சூர்யா (17) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை இயக்கிய ஹர்ஷ்வர்தன் (17) படுகாயமடைந்தார். இந்த விஷயம் குறித்து ஹர்ஷ்வர்தனின் தந்தை மீது சிறார்களை வாகனத்தை இயக்க அனுமதித்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா.?