பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடுரோட்டில் வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் கம்பர் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் நிஷாந்த் லோடு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு வீட்டின் அருகே அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மகும்பலை கண்டவுடன் நிஷாந்த் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் விரட்டி சென்று நிஷாந்தை சரமாரியாக விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த நிஷாந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் நிஷாந்தின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிஷாந்துக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவருக்கும் முன் விரோதம் இருப்பதே தெரியவந்தது. இதனால் அஜித் தரப்பினர் நிஷாந்தை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.