திருமணத்திற்கு மறுத்த காதலி... கழுத்து, மார்பு, வயிறு என 9 இடங்களில் சரமாரி குத்தி கொலை.. காதலன் பரபரப்பு செயல்.!!



Chhattisgarh Native North Indian Woman Murder at Namakkal by Love Boy He Also Suicide Attempt

திருமணம் செய்துகொள்ளமறுத்த காதலியை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தை சார்ந்தவர்கள் ரூபேஷ் குமார் மற்றும் துளசி. இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளைவளத்தூர் அருகே இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். 

இவர்கள் இருவருக்கும் இடையே முதலில் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த நிலையில், பணியிடத்தில் ஒன்றாகவே பணியாற்றி வந்துள்ளனர். மேலும், காதல் ஜோடி அவ்வப்போது தனிமையிலும் சந்தித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், ரூபேஷ் குமார் தனது காதலி துளசியிடம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறவே, அதற்கு துளசி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரூபேஷ் குமார், நேற்று காதலி தங்கியுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். 

namakkal

அங்கு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ரூபேஷ் குமார் எடுத்து வந்த கத்தியை எடுத்து துளசியின் கழுத்து, மார்பு, வயிறு என 9 க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதனால் துளசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அவரின் அலறல் சத்தம் கேட்டு பிற நன்பர்கள் வரவே, ரூபேஷ் குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் துளசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.