பச்சை துண்டுனா பாசமா பேசுவேன் னு நினைச்சியா?.. சார் பதிவாளரை மிரளவிட்ட விவசாயி.!



Coimbatore Annur Sub Register Condemn by Farmer 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் சார்பதிவாளர் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் நிலத்தில் சிப்காட் அமைக்க அரசு உத்தரவிட்ட நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னர் அவை கைவிடப்பட்டன. 

இதனிடையே, சிப்காட் அமையவிருந்த நிலங்களை தனியார் ஒருவர் மறைமுகமாக அதிகளவு வாங்குவதாக தெரியவருகிறது. இதனால் உள்ளூரில் நடைபெறும் நிலங்கள் விற்பனை போன்றவற்றுக்கு சார் பதிவாளர் மறைமுக முட்டுக்கட்டை போட்டதாகவும் தெரியவருகிறது. 

நழுவ முயற்சித்த அதிகாரி

இதனால் விவசாயிகள் தங்களின் நிலங்களை தங்களுக்குள் விற்பனை செய்ய இயலாமல் அவதிப்படவே, இன்று விவசாய சங்கங்கள் சார்பதிவாளர் செல்வ பாலமுருகனை நேரில் சந்தித்து முறையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, சார்பதிவாளர் விவசாயிகளிடம் தவறான தகவல் பரவியுள்ளது என இரண்டு வார்த்தையை கூறிவிட்டு அலுவலகத்திற்குள் செல்ல முயன்றார். 

இதையும் படிங்க: ஏலியன் இருக்கா? இல்லையா? - முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா கூறுவது என்ன?.!

ஆப்படித்த விவசாயி

அச்சமயம் அவரை நிறுத்திய விவசாய சங்க பிரதிநிதி, கேள்விகளால் அவரை துளைத்தெடுத்தார். மேலும், தாங்கள் செய்ய வந்துள்ள அரசுப்பணியை சரியாக செய்ய வேண்டும். மாறாக சட்டத்திற்கு புறமாக செயல்பட்டால், நீதிமன்றம் வாயிலாக ஒரே வாரத்தில் உங்களை அருகிருந்து அனுப்பிவிடுவோம். 

எனக்கு எல்லா விஷயமும் தெரியும். தற்போது உங்களிடம் உரிய முறையில் போராட்டம் நடத்தி தகவலை தெரியப்படுத்துகிறோம். நீங்கள் அரசு பணியாளர்கள் தானே தவிர, கடவுள் அல்ல. ஆகையால், உங்களின் பணியை மேற்கொள்ளுங்கள் என கடிந்துகொண்டார். இந்த வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர், லேப் அசிஸ்டன்ட் உட்பட 4 பேர் கைது.!