96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#Breaking: உக்கடம் கார் வெடிப்பு விவகாரம்.. NIA விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டவர் பலி., விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!
கார் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குறித்த அடையாளம் அம்பலமாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்தவர் உடல் கருகியதால், அவரின் அடையாளம் சேகரிக்கப்பட்டது வந்தது. மேலும், கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்த தகவலை அறிந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு கோவைக்கு நேரில் விரைந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், காரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், அவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்த நபராது வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டிற்கான வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபீன் கடந்த 2019 ம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு முகமையால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.